காத்திருப்பு அறை,
என்
இருக்கை அருகே
வந்தமர்ந்தாய்
நீ….
சட்டென
நம்
கண்கள் சந்திக்க,
மென்னகை
பூத்தாய்..
ஏதோ சில
வெள்ளை காகிதத்தின்
கருப்பு எழுத்துக்களை
உன்
உதடுகள் அசையாமல்
உள்ளத்தில் படித்தாய்…
என்
விரல் கொண்டு
செல்லிடப்பேசியை
நோகடித்தேன்,
மறைமுகமாய்
உன்
முகம் பார்க்க…
உன்
உதடுகள் முத்தமிட
சிற்றுண்டி
சுகமாய் செத்துமடிந்தது…
ஓரக்கண்ணால்
பார்த்தபடியே
வெள்ளை காகிதத்தை
கறையாக்கினேன்…
நான்
காகிதத்தில்
ஏதோ கிறுக்குவதை
நீ
கவனித்தாய்
நீ
கவனிப்பதை
நானும் கவனித்தேன்…
சில்லென்ற
அறையில்…செதுக்கிய
குரல் ஒலிக்க
மெல்ல நடந்து,
என்
கண் மறைந்தாய்…
ஒரு
கவிதை முடிந்ததை
என்
பேனா
உணர்த்தியது…
ஒரு
நொடி பார்வையில்
நிமிடக்
கவிதையானாய்
நீ…
-கார்த்திகண்ணு
2 கருத்துகள்:
தயவு செஞ்சு கவிதைய வுட்டுறுங்க. அல்லது வார்த்தகளை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்காமல் அடுத்தடுத்து எழுதி கட்டுரையாகவாவது எழுதுங்க. தாங்க முடியல. சார்ஜா கீர்ஜா அப்படின்னு போட்டிட்டா கவிதை ஆயிடாது.
வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும். வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் கூட வராது
கருத்துரையிடுக