பக்கங்கள்

திங்கள், 25 ஜூலை, 2011

காத்திருந்த பொழுதுகள்

உன்
முகமோ,முகவரியோ
எதுவும் தெரியாமல்
உனை
தேடிய பொழுதுகள்...

ஏக்கம்,வேதனை
அக்கரை,ஏளனம்
கலந்து
கழிந்த பொழுதுகள்...

இரவும்,பகலும்
கற்பனையின் உலகில்
ஆர்வமும்,அச்சமுமாக
கடந்த பொழுதுகள்…

உன்
வருகைக்காக
சில மாற்றங்கள்,
திட்டங்கள் பல
பட்டியலிட்டு
கரைந்த பொழுதுகள்…

உனை
தேடும் பொழுது
எனை
கடக்க மறுத்த
மணித்துளிகளின் கணம்
அறிந்த பொழுதுகள்…

உன்
முகவரி கண்டு
முகம் பார்த்தபோது
ஆயிரம் அர்த்தங்கள்சொல்லியது
உனக்காக
காத்திருந்த பொழுதுகள்...

-கார்த்திகண்ணு.

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அற்புதம்...
அழகிய கவிதை...

கார்த்திகண்ணு சொன்னது…

நன்றி,தங்களின் ஊக்கத்திற்கு...

கணேஷ் சொன்னது…

நல்லாயிருக்கு’ணா....

கருத்துரையிடுக